பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம்


பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பெருமிதம்
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி கல்வித்துறையில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

சிவகங்கை

காரைக்குடி

பள்ளி கல்வித்துறையில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

முன்மாதிரியாக

கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள நூற்றாண்டு விழா நுழைவுவாயில், காமராஜர் கலையரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- பள்ளி கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தினை கல்வி வளம் மிகுந்த மாநிலமாக உருவாக்கும் பொருட்டு சிறந்த திட்டங்களை கல்வித்துறையில் செயல்படுத்தி, பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி என தனித்தனியாக தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்து வருகிறார்.

நிதி ஒதுக்கீடு

தற்போது நிதிநிலை அறிக்கையில் பள்ளி கல்வித்துறைக்கென ரூ.40 ஆயிரம் கோடி, உயர் கல்வித்துறைக்கென ரூ.7 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.47 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது உயர் கல்வியில் தமிழ்நாடு 54 சதவீதம் பெற்ற மாநிலமாக திகழ்கிறது. பள்ளிகளின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், நன்கொடையாளர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். இது அரசுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

நூற்றாண்டு விழா காணும் கல்லல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் கொடையாளர்கள் நூற்றாண்டு நுழைவுவாயில், சூரிய மின்சக்தி, புதிய கணினிகள், காமராஜர் கலையரங்கம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தங்களது பங்களிப்பை செலுத்தி இப்பள்ளியின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அரசுடன் இணைந்து பணியாற்றியது பாராட்டுதலுக்குரியதாகும் என்று கூறினார்.

பள்ளி கல்வித்துறையில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

தொடர்ந்து பள்ளி நூற்றாண்டு விழாவில் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நன்கொடையாளர்கள் மற்றும் அமைச்சரின் சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. மேலும் மாநில அளவில் சிலம்ப போட்டியில் 2-ம் இடம் பெற்ற மாணவன், திருக்குறள் சொல்லி சிறப்பித்த 2 குழந்தைகள் ஆகியோருக்கும் ஊக்கத்தொகையினை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், கல்லல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணம் அசோகன், ஊராட்சி தலைவர் ராமநாச்சியப்பன், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முத்துசாமி, கல்லல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்்து கொண்டனர்.


Next Story