திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு


திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு
x

திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது என அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி

திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது என அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார்.

பொதுக்கூட்டம்

கல்லல் ஊராட்சி ஒன்றியம் விசாலயங்கோட்டையில் தி.மு.க. தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான தென்னவன் தலைமை தாங்கினார்.

கல்லல் யூனியன் சேர்மன் சொர்ணம் அசோகன் முன்னிலை வகித்தார். கல்லல் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு பாடநூல் வாரிய தலைவர் திண்டுக்கல் லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடந்தது.

தி.மு.க. ஆட்சியில்..

பின்னர் ஏராளமான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், வழங்கி சிறப்புரைஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தி.மு.க. அரசின் 2 ஆண்டு ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழ்கிறது. கருணாநிதி தமிழ் சமுதாயத்திற்கு செய்த பணிகளை அவர் வழிவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனைகளாக தொடர்கிறார். அதனால் திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கல்லல் கரு.அசோகன், பள்ளத்தூர் ரவி, தெய்வானை இளமாறன், ஆதி கண்ணாத்தாள், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆனந்த், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, கல்லல் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், கல்லல் ஒன்றிய கவுன்சிலர்கள் முத்தழகு ஆரோக்கியசாமி, மருதுபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பரணிகிட்டு, மாவட்ட பிரதிநிதிகள் சேசுராஜ், பனங்குடி ஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story