தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும், அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கி சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். மாநில தொழிற்சங்க தலைவர் பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகை கேட்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கோபி, முத்து, மூர்த்தி மற்றும் மகளிர் அணி நிர்வாகி கல்யாணி உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.