தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை பாதுகாக்கக்கோரி கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். இதில் செய்தி தொடர்பாளர் கண்ணையன், ஒன்றிய செயலாளர் குழந்தைவேலு உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.


Next Story