தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்,.
திருச்சி
ெரயில்வேயில் பயிற்சி (அப்ரண்டீஸ்) முடித்தவர்களுக்கு பணி வழங்காததை கண்டித்து தமிழக மக்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பொன்மலை ெரயில்வே பணிமனை முன்பு கருப்பு தீபாவளி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தலைவர் சக்ரபாணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 2008- ல் பயிற்சி முடிந்தவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். தெற்கு ெரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு பழைய முறையில் பணி நியமனம் செய்ய வேண்டும். வடமாநில இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைைய ரத்து செய்ய வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story