சாலை விபத்துகளில் 3-வது ஆண்டாக சென்னை முதலிடம்.!


சாலை விபத்துகளில் 3-வது ஆண்டாக சென்னை முதலிடம்.!
x
தினத்தந்தி 30 Aug 2022 6:20 AM GMT (Updated: 30 Aug 2022 6:28 AM GMT)

2020 முதல் 2021 வரை மாநிலங்களில் போக்குவரத்து விபத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக தமிழ்நாட்டில் (46,443 முதல் 57,090 வரை) பதிவாகியுள்ளது.

சென்னை

தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த 2021-ம் ஆண்டில் நாடு முழுவதும் நடந்த தற்கொலைகள் மற்றும் சாலை விபத்துகள் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021 இல் இந்தியா முழுவதும் தற்கொலையால் ஏற்படும் இறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 6.1% உயர்ந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் மொத்தம் 164,033 பேர் தற்கொலையால் இறந்து உள்ளனர். இது 2020 ஐ விட 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது 2020ஆம் ஆண்டு 153,052 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தரவு காட்டுகிறது. 2019 இல், இந்த எண்ணிக்கை சுமார் 139,000 ஆக இருந்தது.

2010 இல் நாட்டில் பதிவாகிய இரண்டாவது மிக உயர்ந்த தற்கொலை விகிதம், 10 லட்சம் மக்கள்தொகைக்கு 113.5 இறப்புகள் ஆகும்.

2021 ஆம் ஆண்டில் ஒப்பீட்டளவில் ஊரடங்குகள் குற்றங்கள் மற்றும் விபத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2020 இல் 66 லடசமாக இருந்த குற்றங்கள் 2021 இல் 61 லடசமாக குறைந்துள்ளன.

ஒட்டுமொத்த விபத்து இறப்புகள் 374,000 இலிருந்து 397,000 ஆக அதிகரித்தன.

இயற்கைவிபத்து மரணங்கள் - நிலநடுக்கம், வெள்ளம் அல்லது வெப்பம் போன்றவை - 2020 ஐ விட 2021 இல் குறைவாக இருந்தது. அவை 2020 இல் 7,405 இல் இருந்து 2021 இல் 7,126 ஆக குறைந்துள்ளது. 2019 இல் இதுபோன்ற இறப்புகள் 8,145 ஆக இருந்தது.

போக்குவரத்து விபத்துக்கள் போன்ற பிற காரணங்கள்: இந்தியாவில் ஏற்படும் விபத்து மரணங்களில் 40% போக்குவரத்து விபத்துகளால் ஏற்படுகிறது. 2020 இல் 146,354 இல் இருந்து 2021 இல் 173,860 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், 2019 இல் 181,113 இறப்புகள் நிகழ்ந்ததை விட இது போன்ற இறப்புகள் தொடர்ந்து குறைவாகவே இருந்தன.

4,03,116 சாலை விபத்துகளில் 1,55,622 பேர் உயிரிழந்துள்ளனர்

17,993 ரெயில் விபத்துக்களில் 16,431 இறப்புகள் ஏற்அட்டு உள்ளது.

1,550 ரெயில்வே கிராசிங் விபத்துக்கள் 1,807 இறப்புகளை ஏற்படுத்தியுள்ளன

2020 முதல் 2021 வரை மாநிலங்களில் போக்குவரத்து விபத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக தமிழ்நாட்டில் (46,443 முதல் 57,090 வரை) பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (43,360 இலிருந்து 49,493), உத்தரப்பிரதேசம் (30,593 முதல் 36,509), மராட்டியம் (90 லிருந்து 90 30,086 வரை) மற்றும் கேரளா (27,998 முதல் 33,051 வரை).

பெரும்பாலான விபத்துகள் அதிவேகத்தால் நடந்தவை, மொத்த விபத்துகள் 59.7% ஆகும். 21,792 பேர் உயிரிழந்த உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் சாலை விபத்துகளில் 15,384 பேர் உயிரிழந்துள்ளனர்.

2021ல் போக்குவரத்து விபத்துகளால் 1.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் இதில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

உத்தரப்பிரதேசம் - 24,711 இறப்புகள்

தமிழ்நாடு - 16,685 இறப்புகள்

மராட்டியம் - 16,446 இறப்புகள்

நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகள்/கல்லூரிகள்/இதர கல்வி நிறுவனங்களுக்கு அருகில் ஏற்படும் சாலை விபத்துகளால் மொத்த இறப்புகளில் 24.4 சதவீதம் உத்திரபிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து 9.4 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச உயிரிழப்புகள் உத்தரப்பிரதேசத்தில் (7,212), அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் (5,360) நிகழ்ந்ததாக கூறப்பட்டு உள்ளது.

பெருநகரங்களில், சென்னை அதிக சாலை விபத்துகள் ஏற்பட்டு உள்ளது( 5,034 பேர்). டெல்லியில் 4,505 வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், டெல்லியில் 1,172 இறப்புகளும், சென்னையில் 998 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன.

நாட்டில் உள்ள 53 மெட்ரோ நகரங்களில் பதிவாகி உள்ள 55,400 விபத்துகளில் 2021-ம் ஆண்டில் சென்னை பெருநகர எல்லைக்கு மட்டும் சுமார் 5 ஆயிரம் வாகன விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் சென்னை 2-வது இடத்தில் இருந்தது. கடந்த 2020-ம் ஆண்டில் மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களை ஓட்டியபோது 236 பேர் இறந்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டில் இந்த இறப்பு எண்ணிக்கை 15 ஆக குறைந்திருப்பது புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.


Next Story