தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்திற்கு உயர்த்த வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேச்சு


தமிழகத்தை  ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்திற்கு உயர்த்த வேண்டும் -  மு.க.ஸ்டாலின் பேச்சு
x

தொழில் தொடங்க சிறந்த மாநிலங்கள் பட்டியலில், 14வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளதாக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சென்னை, சென்னை, நுங்கம்பாக்கத்தில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், புதிய தொழில் நிறுவனங்கள் உடன் தமிழக அரசு 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது.

தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளத் தொழில் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல் நிறுவனங்களுடன் கலந்துரையாடி புதிய முயற்சிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை, மதுரை மாவட்டங்களில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரைவில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த மாநாட்டில் 60 ஒப்பந்தகள் கையெழுத்தாக உள்ளதாகவும், 70 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் கிடைக்கும் என்றும் தொழில் துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதுதவிர, பணிகள் நிறைவடைந்துள்ள 12 திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்ந்து தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடம் பிடித்துள்ளது. வரலாற்று சாதனை. ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே இத்தகையக வரலாறு சாதனையை படைத்துள்ளோம். முதலிடத்திற்கு வருவற்கான திட்டமிடலை தொடங்கி விட்டோம்.

தமிழ்நாடு அரசின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து பெரிய நிறுவனங்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் குறிக்கோள்களை அடைய இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து அரசு பணியாற்றுகிறது

உலகின் மூலை முடுக்கெல்லாம் "மேட் இன் தமிழ்நாடு" பொருட்கள் சென்றடைய வேண்டும். திராவிட மாடல் மாநிலத்தை நோக்கி முதலீட்டாளர்கள் படையெடுத்து வருகின்றனர்.

தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு மிகவும் உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்திற்கு உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டின் தொழில் துறையை தங்கமாக மாற்றியவர் அமைச்சர் தங்கம் தென்னரசு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story