தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா நடைபெற்றது.
கரூர்
கரூர் தாந்தோணிமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று தாந்தோணி வட்டார கிளை சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஆசிரியர்கள் ரத்ததான முகாம், விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா, மாநில பொறுப்பு பெற்ற பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் பரணிதரன் தலைமை தாங்கினார். தந்தோணி வட்டார கல்வி அலுவலர் சகுந்தலா முன்னிலை வகித்தார். கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் சிறப்புரையாற்றினார். இதில் வட்டார செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் ராமநாதன் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story