வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன்


வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன்
x

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

கோவை:

தென்னிந்திய அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டி கோவை பி.எஸ்.ஜி. டெக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்களுக்கான இறுதி போட்டியில் தெலுங்கானா அணியும், தமிழக அணியும் மோதின. வீரர்கள் வீல் சேரில் அமர்ந்து கொண்டு விளையாடினர். முடிவில் தமிழக அணி 40-27 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

பெண்களுக்கான இறுதி போட்டியில் கர்நாடகா அணியும், தமிழக அணியும் மோதின. இரு அணிகளை சேர்ந்த வீராங்கனைகள் வெற்றி பெற கடுமையாக போராடினர். இருப்பினும் கர்நாடகா அணி 20-10 என்ற புள்ளி கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கலெக்டர் சமீரன் கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


Next Story