தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு


தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
x

நெமிலி பாலா பீடத்தில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ராணிப்பேட்டை

நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சின்னத்தேரில் அன்னை பாலாவும், ராஜேஸ்வரி தாயாரும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் ஸ்ரீ பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி அனைவருக்கும் புத்தாண்டு பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து அவர் எழுதி வீரமணி, ராதா பாடியுள்ள சித்திரை மாதத்திலே பாடல் அடங்கிய இசைகுறுந்தகட்டின் மறுவெளியீட்டு விழா நடைபெற்றது.

மேலும் குருஜி நெமிலி பாபாஜி அனைவருக்கும் அன்னை பாலா வண்ணப்படத்தை வழங்கினார். தொடர்ந்து பாலா பீட நிர்வாகி அன்னை பாலா அபிஷேகம், அர்ச்சனை மற்றும் ஆராதனையை நடத்தினார். பின்பு செயலர் முரளிதரன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நெமிலி இறைபணி மன்றம், ஸ்ரீ பாலா ஆத்மீக குடும்பங்கள் செய்தனர்.


Next Story