தமிழர் உரிமை மீட்பு களம் ஆர்ப்பாட்டம்


தமிழர் உரிமை மீட்பு களம் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் தமிழர் உரிமை மீட்பு களம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் அருகில் தமிழர் உரிமை மீட்பு களம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஒப்பந்ததாரரை, சாதி பெயரை சொல்லி திட்டிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழர் உரிமை மீட்பு களம் மாநில ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமை தாங்கினார். இதில் திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருக்குமரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுடலைராஜ், தமிழ்ப்புலிகள் கட்சி தமிழரசு, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் துரைப்பாண்டியன், புரட்சி பாரதம் நெல்சன் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story