உரத்தின் செலவை குறைக்க தமிழ் மண் வளம் இணையதளம்
உரத்தின் செலவை குறைக்க தமிழ் மண் வளம் இணையதளம் மூலம்தெரிந்து கொள்ளலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் மண் வளம் இணையதளம் என்ற இணையதளத்தை விவசாயிகள் அறிந்துகொள்வதன் மூலம் தங்கள் விவசாய மண்ணின் வளத்தினை அறிந்து, தேவையான உரத்தினை மட்டும் பயிருக்கு அளித்து உரங்களின் செலவினை குறைக்கலாம்.
http://tnagriculture.in/mannvalam எனும் இணைய முகப்பில் விவசாயிகள் தங்கள் மாவட்டம், வட்டாரம், கிராமம், தங்களது நிலத்தின் புல எண், உட்பிரிவு எண்ணை பதிவு செய்தால் உடனடியாக மண்வளம் குறித்த அனைத்து விபரங்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மண் வளம் அட்டையாக மின்னணு வடிவில் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story