தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை வடக்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோயம்புத்தூர்
மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததற்கு பா.ஜ.க. அரசு பொறுப்பேற்க வலியுறுத்தி கோவை வடக்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் நாக.பிரசாந்த் வரவேற்றார். இதில், மாநில பொதுச் செயலாளர் இளவேனில், மாநில அமைப்பு செயலாளர் சபாபதி, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிற்றரசு, மாநில துணை பொது செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முடிவில் காரமடை ஒன்றிய செயலாளர் கவுதமன் நன்றி கூறினார்.
Next Story






