தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தாராபுரம்
தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சி சார்பில் சார்பதிவாளர் அலுவலகத்தின் முறைகேடுகளை கண்டித்து அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தாராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அனுமதியில்லாமல் புரோக்கர்களின ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இவர்கள் நிலம் வாங்குவோரை இனம் கண்டு நிலத்தை வாங்குவோரிடம் அந்த நிலத்தின் பத்திர பதிவு செய்ய அனைத்து பணிகளையும் புரோக்கர்களே செய்து அதன் பிறகு சார்பதிவாளரிடம் அனுப்புகின்றனர். அதனை முறையாக ஆய்வு செய்ய வேண்டிய சார்பதிவாளர் முறையாக கவனிப்பதில்லை. மேலும் சார் பதிவாளர் ஒரு இடத்தை பத்திரப்பதிவு செய்யும் போது அதனுடைய உண்மை தன்மை தெரியாமல் ஆள் மாறாட்டம் செய்து போலியான ஆவணங்களின் உண்மை தன்மையை மறைத்து ஆவணம் இன்றி நிலத்தை கிரையம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
அரசுக்கு செலுத்த வேண்டிய நில மதிப்பீட்டை குறைத்து அரசுக்கு செல்ல வேண்டிய வருவாயை லஞ்சமாக பெற்றுக்கொண்டு பதிவு செய்கிறார். இதுபோல பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் சார் பதிவாளரை நிரந்தரவாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என கோரி கோஷமிட்டனர். அப்போது தமிழ் புலிகள் கட்சி திருப்பூர் மாவட்ட மேற்கு மண்டல துணைச் செயலாளர் ஒண்டிவீரன் உள்பட 15க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.