53 விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்கள் தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்


53 விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்கள் தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 5 Sept 2023 1:00 AM IST (Updated: 5 Sept 2023 1:07 AM IST)
t-max-icont-min-icon

53 விவசாயிகளுக்கு மானிய விலையில் எந்திரங்களை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு விவசாய எந்திரங்கள் வழங்கும் விழா நடந்தது. 50 சதவீத மானியத்தில் ரூ.1 கோடியே 22 லட்சம் செலவில் 53 விவசாயிகளுக்கு பவர் டில்லர் எந்திரங்கள் வழங்கப்பட்டது. இதை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, நகராட்சி துணைத் தலைவர் பாலசுந்தரம், நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமுருகன், யூனியன் துணைத்தலைவர் முத்துச்சாமி, தாசில்தார் ராஜா, உதவி செயற்பொறியாளர் இந்திரா, உதவி பொறியாளர்கள் வனராஜ்குமார், சண்முகா நதி, சார்க்கின் விமலா, விஜயராணி நகர் கழக செயலாளர் பொன்னுச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளிதேசிங்குராஜா, சிந்துஜா சடையப்பன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை வேளாண்மை பொறியியல் துறையினர் செய்திருந்தனர்.


Next Story