தமிழ்நாடு பட்ஜெட் மின்மினிப்பூச்சி, கானல்நீர் வெளிச்சம் தராது,தாகம் தீர்க்காது-எடப்பாடி பழனிசாமி


தமிழ்நாடு பட்ஜெட் மின்மினிப்பூச்சி, கானல்நீர் வெளிச்சம் தராது,தாகம் தீர்க்காது-எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 20 March 2023 7:38 AM GMT (Updated: 20 March 2023 7:51 AM GMT)

தமிழ்நாடு பட்ஜெட் மின்மினிப்பூச்சி, மக்களுக்கும் வெளிச்சம் தராது, கானல் நீர் தாகம் தீர்க்காது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்

சென்னை

சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்எல்சி விரிவாக்கத்திற்கு விவசாய நிலத்தை பறிக்கும் செயலைக் கண்டித்தும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் அமல் படுத்தாதைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்தோம்.

மாநிலத்தில் வரி வருவாய் அதிகரித்துள்ளது. பற்றாக்குறையே இல்லாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், பற்றாக்குறை 30,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் குறைந்துள்ளது எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

திமுக அரசு மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மின் கட்டணம், சொத்து வரி, பால் விலையை உயர்த்தியுள்ளனர்; இது தான் அவர்கள் மக்களுக்கு அளிக்கும் பரிசு"

மகளிருக்கான உரிமைத் தொகை எல்லோருக்கும் வழங்கப்படும் என்றார்கள். ஆனால், இப்போது தகுதியானவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்கிறார்கள். என்ன தகுதி என்பதை வெளியிடவில்லை".

"மின்மினிப்பூச்சி, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிச்சம் தராது, கானல் நீர் தாகம் தீர்க்காது"

நீட் விலக்கு ரகசியத்தை வெளியிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கூறினார்.

"கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டதாக சொன்னீர்கள், அதை ஓ.பி.எஸ்சின் திறமைக்கான சான்றாக எடுத்துக்கொள்ளலாமா?" என செய்தியாளர் கேட்டதற்கு, "அது எப்படி, அப்போது நான்தானே முதலமைச்சர்? நிதி ஒதுக்குவதுதான் அவர். மீதியெல்லாம் கூட்டுப்பொறுப்புதான்" என எடப்பாடி கே. பழனிச்சாமி பதில்.


Next Story