தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு


தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிப்பு
x

கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளிேயற்றிய தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல் நேரடியாக அருகில் இருந்த நிலத்தில் விடுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கழிவு நீரை நிலத்தில் வெளியேற்றிய தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்க மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் அதிரடி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மின்சாரத்துறை அதிகாரிகள் தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

1 More update

Next Story