தோல் தொழிற்சாலை ஆபரேட்டர் மின்சாரம் தாக்கி பலி
தோல் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
தோல் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
மேற்கு வங்கம் கர்பேட்டா பகுதியை சேர்ந்தவர் நசீப்கான் (வயது 23). இவர் சிப்காட் பேஸ் II ல் உள்ள தனியார் தோல் தொழிற்சாலை வளாகத்தில் தங்கி டிரம் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏர் புளோயர் எந்திரத்தை இயக்கியுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது, நசீம்கான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சிப்காட் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினமும் மற்றொரு தோல் தொழிற்சாலையில் ஏர்புளோயர் எந்திரத்தை இயக்கியபோது மின்சாரம் தாக்கியதில் சுரேஷ்காந்தி என்ற தொழிலாளி இறறந்தது குறிப்பிடத்தக்கது.