111 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்ய இலக்கு


111 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்ய இலக்கு
x

நடப்பு பருவத்தில் மத்திய அரசு 111 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும், பருத்தி சாகுபடி குறைய வாய்ப்பு உள்ளதாகவும் வேளாண் நிபுணர் தெரிவித்தார்.

விருதுநகர்


நடப்பு பருவத்தில் மத்திய அரசு 111 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும், பருத்தி சாகுபடி குறைய வாய்ப்பு உள்ளதாகவும் வேளாண் நிபுணர் தெரிவித்தார்.

மழை குறைவு

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தேசிய அளவில் கடந்த ஆகஸ்டு மாதம் 36 சதவீதம் மழை குறைந்த நிலையில் காரிப்பருவ பயிர் சாகுபடி பாதிக்கும் என கருதப்பட்டது. ஆனால் நடப்பு மாதத்தில் ராஜஸ்தான் தவிர பிற மாநிலங்களில் வழக்கமான அளவிற்கு மழை பெய்யும் நிலையில் காரிப்பருவ பயிர் சாகுபடியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. மத்திய விவசாய அமைச்சகம் காரிப்பருவத்தில் 111 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் பயிர் சாகுபடியை பொருத்தமட்டில் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது.

பருப்பு சாகுபடி

கடந்த 2022-ம் ஆண்டு இதேபருவத்தில் 392.81 லட்சம் எக்டேர் நெல் சாகுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது 403.41 லட்சம் எக்டேர் நெல் சாகுபடிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட அளவு அரிசி உற்பத்திக்கு வாய்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு பருப்பு வகைகள் 131.17 லட்சம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 119.9 லட்சம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பருப்பு சாகுபடி குறைந்துள்ள நிலையில் பருப்பு உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளதால் விலை உயர வாய்ப்பு ஏற்படும்.

சிறுதானியங்கள்

சிறுதானியங்கள் கடந்தாண்டு 181.24 லட்சம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 182.2 லட்சம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் வித்துக்கள் கடந்தாண்டு 193.5 லட்சம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 191.49 லட்சம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 128.87 லட்சம் பருத்தி சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் நடப்பு ஆண்டில் 125 லட்சம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் பயிர் சாகுபடி நிலப்பரப்பு கடந்த ஆண்டை போல நடைபெற்றாலும் பருப்பு மற்றும் பருத்தி சாகுபடி குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story