மதுரை வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்


மதுரை வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
x

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி மதுரை வைகை ஆற்றில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு செய்தனர்.

மதுரை

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி மதுரை வைகை ஆற்றில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண வழிபாடு செய்தனர்.

மகாளய அமாவாசை

இறந்து போன முன்னோர்களுக்கு ஆடி, தை, புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று திதி, தர்ப்பணம் கொடுத்தால் நல்லது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாைச வந்தது. இதனால் ஏராளமானோர் நேற்று நீர்நிலைகளில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

வைகை ஆற்றில்...

அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், இம்மையிலும் நன்மை தருவார் கோவிலிலும், வைகை ஆற்றுக் கரையான பேச்சியம்மன் படித்துறையிலும், திருமலையார் படித்துறை காசி விஸ்வநாதர் கோவிலிலும், மதுரை புதூர் அமிர்தகடேஸ்வரர் அங்காள பரமேஸ்வரி கோவிலும்,மதுரை யானைக்கல் தரைப்பாலத்தின் அடியிலும் புரோகிதர்கள் முன்னிலையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இந்த தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று காலை முதல் மதியம் வரை நடைபெற்றது. வைகை ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஏராளமானோர் வழிபட்டனர்.

திருவேடகம், சோழவந்தான், அணைப்பட்டி ஆகிய வைகை ஆறு உள்ள பகுதியில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் திருவேடகம் சீரடி சாய்பாபா கோவில் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Related Tags :
Next Story