டாஸ்மாக் பார் உரிம டெண்டர் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


டாஸ்மாக் பார் உரிம டெண்டர் - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

கோப்புப்படம் 

டெண்டர் நடைமுறையை தொடராலாம் என்றும், அதேசமயம் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள தின்பங்கள், தண்ணீர் போன்றவை விற்பனை செய்யும் பார்களை நடத்துவதற்கு உரிமங்கள் வழங்குவதற்கான டெண்டருக்கான விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2 ஆம் தேதி அறிவிப்பானை வெளியிட்டது.

இந்த அறிவிப்பானையை எதிர்த்து திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் பார் உரிமதாரர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், பார் நடத்தும் இடத்தில் டெண்டரை வெற்றிபெறுபவர்களுக்கு வழங்கவேண்டும் என்று டாஸ்மாக் வற்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உரிமம் பெற்றுள்ள தங்களுக்கும், டாஸ்மாக்கிற்கும் இடையே இடத்திற்கான குத்தகை ஒப்பந்தம் ஏதும் செய்யப்படாத நிலையில், நில உரிமையாளர்களிடம மட்டும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும் சூழலில் மூன்றாம் நபர்களுக்கு இடத்தை வழங்க நிர்பந்திக்க முடியாது என்று அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பார் உரிமையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யாமல் விடுக்கப்பட்டுள்ள டெண்டரை ரத்துசெய்யவேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டெண்டர் நடைமுறையை தொடராலாம் என்றும், அதேசமயம் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மனுவுக்கு ஆகஸ்ட் 26 தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தவிட்ட கோர்ட்டு விசாரணையை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.


Next Story