டாஸ்மாக் பார் சூறை; ஊழியருக்கு பீர்பாட்டில் அடி
டாஸ்மாக் பார் சூறை; ஊழியருக்கு பீர்பாட்டில் அடி
தொண்டாமுத்தூர்
தொண்டாமுத்தூரில் டாஸ்மாக் பார் ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கி பாரை சூறையாடிய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் பார்
கோவையை அடுத்த தொண்டா முத்தூர்-புத்தூர் ரோட்டில் டாஸ்மாக் கடை மற்றும் மதுக்கூடம் (பார்) செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்துவதற்காக 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தது. பாரில் அவர்கள் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தினர்.
இரவு 10 மணியாகியும் அங்கிருந்து அந்த கும்பல் புறப்படவில்லை. இதனால் பார் ஊழியரான பழனியப்பன், நீங்கள் கிளம்பினால் வசதியாக இருக்கும். கடையை மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு அந்த கும்பல் ஒப்புக்கொள்ள வில்லை. பழனியப்பனிடம் மேலும், மதுபாட்டில் கேட்டு தகராறு செய்துள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பீர் பாட்டி லால் பழனியப்பனை சரமாரியாக தாக்கி யது. இதில், அவருக்குமண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை கண்டு அங்கிருந்த சக ஊழியர்கள் தட்டிக்கேட்டனர்.
சூறையாடினர்
இதற்கிடையில் அந்த கும்பலில் இருந்த ஒருவர் தேவராயபுரத்தை சேர்ந்த சிலருக்கு போன் செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் மேலும் 7 பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளில் புறப் பட்டு வந்தனர். பின்னர் அவர்கள் பாரில் இருந்த டேபிள், சேரை அடித்து உடைத்து பாரை சூறையாடி விட்டு தப்பிச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து பழனியப்பனை சக ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
11 பேர் கைது
விசாரணையில், தேவராயபுரத்தைச் சேர்ந்த நொய்யல் கார்த்திக் என்பவர் தலைமையில் கடையை சூறையாடியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நொய்யல் கார்த்திக் (வயது 29), புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் வீரசேகரன் (29), நரசீபுரத்தை சேர்ந்த பிரகாஷ் (27), தேவராய புரத்தை சேர்ந்த சீனிவாசன் (20), மகா விஷ்ணு என்ற சபரி (19), ஹரிஹரன் (19), பாரதி கண்ணன் (22), அருணகிரி (19), வாஞ்சிநாதன் (21), சந்தோஷ்குமார் (21) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 11 பேர் என்பது தெரிய வந்தது. பின்னர் இவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நொய்யல் கார்த்திக்கிற்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இதற்கு மது விருந்து கொடுப்பதற்காக அவர், நண்பர்க ளுடன் மதுபானபாருக்கு வந்துள்ளார். அப்போது தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.