டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடல்
மிலாடி நபி, காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் மூடப்படுகிறது.
கரூர்
நாளை (வியாழக்கிழமை) "மிலாடி நபி" மற்றும் வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) "காந்தி ஜெயந்தி" அன்று கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற ஓட்டல்கள் உலர்தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் எனவும், அன்றைய தினங்களில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் (டாஸ்மாக் கடைகள்) மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற கூடங்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story