டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
இறக்கு கூலி உயர்வு, போனஸ் வழங்கிடக்கோரி டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்
மதுபான உற்பத்தி ஆலை நிர்வாகங்கள் இறக்கு கூலி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும். குடோன் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு சட்டப்படியான தீபாவளி போனஸ் வழங்கிட வேண்டும். ஏற்றுக்கூலி தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தொழிற்பேட்டை டாஸ்மாக் குடோன் முன்பு டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம் கண்டன உரையாற்றினார். இதில் டாஸ்மாக் மாநில குழு உறுப்பினர் சுரேஷ்குமார், மாவட்ட பொருளாளர் வைரவன் உள்பட சுமைப்பணி தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story