டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 கேட்டு ஊழியர் வாக்குவாதம் - அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை
தாம்பரம் அடுத்த திருநீர்மலை சர்வீஸ் சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மது பாட்டிலுக்கு கூடுதல் விலை கேட்ட ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை,
தாம்பரம் அடுத்த திருநீர்மலை சர்வீஸ் சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மது பாட்டிலுக்கு கூடுதல் விலை கேட்ட ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
செந்தில் என்ற டாஸ்மாக் ஊழியர், மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் தருமாறு வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த நிலையில், அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக டாஸ்மாக் ஊழியர் செந்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு 11 ஆயிரத்து 800 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story