மாநகராட்சி சார்பில் வரி வசூல் முகாம்


மாநகராட்சி சார்பில் வரி வசூல் முகாம்
x

மாநகராட்சி சார்பில் வரி வசூல் முகாம் நடைபெறுகிறது.

கரூர்

கரூர் மாநகராட்சியின் தீவிர வரி வசூல் முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. கரூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிட வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகியவற்றை கரூர் மாநகராட்சி மைய அலுவலகம், வாங்கப்பாளையத்தில் உள்ள மண்டலம் 1 அலுவலகம், கரூர் செங்குந்தபுரம் 3-வது கிராசில் உள்ள மண்டலம் 2 அலுவலகம், தெற்கு காந்திகிராமம், விடியல் மருத்துவமனை மேல்புறம் உள்ள மண்டலம் 3 அலுவலகம், தாந்தோணிமலையில் உள்ள மண்டலம் 4 அலுவலகம் ஆகிய மையங்களில் செலுத்தலாம். மேலும் ஆன்லைன் மூலமாக https://tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்திலும் வரி செலுத்தி மாநகராட்சியால் எடுக்கப்படும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மற்றும் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு செய்யும் நடவடிக்கையினை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story