ஆனைமலை பேரூராட்சியில் வரிவசூல் பணி தீவிரம்

ஆனைமலை பேரூராட்சியில் வரிவசூல் பணி தீவிரம்
ஆனைமலை
ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் தொழில் வரி, குடிநீர் வரி, சொத்து வரி உள்ளிட்ட 6 ஆயிரத்து 600 வரிகள் உள்ளது. அதனை வசூல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து செயல் அலுவலர் உமாராணி கூறியதாவது:- சொத்துவரி, தொழில்வரி, குடிநீா்க் கட்டணம் மற்றும் இதர கட்டணம் ஆகிய கட்டணங்களை வசூல் செய்ய அதிகாரிகள் வாகனங்களில் வீடு தேடி சென்று தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும் பேரூராட்சிகளில் 'க்யூ -ஆர்' கோடு மூலம் வரி செலுத்தும் சுலபமான வழிமுறைகள் உள்ளன. இருப்பினும் 15 சதவீதம் மக்கள் இன்னும் வரி செலுத்தாமல் உள்ளனர். வரி செலுத்த முடியாத நபர்கள் வருகிற 10-ந்தேதிக்குள் வரியை செலுத்த வேண்டும். வரி செலுத்தாத நபர்களின் குடியிருப்புகள், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும். மேலும் கடை உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






