டெய்லர் தீக்குளித்து தற்கொலை


டெய்லர் தீக்குளித்து தற்கொலை
x

நெகமம் அருகே உடல்நிலை சரியாகாததால் டெய்லர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

கோயம்புத்தூர்

நெகமம்,

நெகமம் அடுத்த காணியாலாம்பாளையத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 47), டெய்லர். இவரது மனைவி மல்லீஸ்வரி (42). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இதற்கிடையே தனசேகருக்கு இயற்கை உபாதை அடிக்கடி வந்துள்ளது. அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனசேகர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீயை பற்ற வைத்து உள்ளார்.

உடலில் தீப்பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து தனசேகரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story