மொபட் மீது பஸ் மோதி டீ மாஸ்டர் பலி
மொபட் மீது பஸ் மோதி டீ மாஸ்டர் பலி
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(வயது 60). கோதவாடி பிரிவு அருகே உள்ள ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு ராஜமாணிக்கம் தனது வேலையை முடித்துவிட்டு மொபட்டில் கல்லாங்காட்டுபுதூருக்கு புறப்பட்டார். கோதவாடி பிரிவு சர்வீஸ் சாலையில் வந்தபோது பின்னால் வந்த தனியார் பஸ் திடீரென மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ராஜமாணிக்கம் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ராஜமாணிக்கம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பஸ் டிரைவரான வீரபாண்டி பகுதியை சேர்ந்த கிரி(23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.