6 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கிய டீக்கடைக்காரர் கைது


6 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கிய டீக்கடைக்காரர் கைது
x

6 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கிய டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டி சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு 6 கிலோ 300 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் கொடுத்த புகாரின்பேரில் கடையின் உரிமையாளர் செந்தண்ணீர்புரம் ஆசாத் தெருவை சேர்ந்த ரவீந்திரனை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருச்சி கல்லுக்குழி மற்றும் காஜாப்பேட்டை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா உத்தரவின்பேரில், மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். மேலும் கல்லுக்குழி பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற ஒரு கடையின் உரிமையாளரையும், அவரது இருசக்கர வாகனத்தையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story