ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்


ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
x

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் 4 ஆசிரியர் சங்கங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் 4 ஆசிரியர் சங்கங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினரும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தினரும், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும், குடும்பத்துடன் பங்கேற்றதால், பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகம் கூட்டத்தால் அலைமோதுகிறது. இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் நிருபர்களிடம் கூறுகையில், 'எங்கள் கோரிக்கைக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசுடன் பலதடவை பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால், இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.' என்றார். இதேபோல், மற்ற ஆசிரியர் சங்கங்களும் அரசு எங்களை அழைத்து பேசி ஒரு நல்ல முடிவை அறிவிக்கும் வரை எங்கள் போராட்டம் நீடிக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.


Next Story