வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கீழ்பென்னாத்தூரில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட இடைநிலை ஆசிரியர்களை நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கானலாபாடி தலைமையாசிரியர் வேலு தலைமை தாங்கினார். ஜமீன் அகரம் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது அனைத்து ஆசிரியர் சங்கங்களின் சார்பாக கடம்பை பட்டதாரி ஆசிரியர் தமிழ்ச்செல்வன் மற்றும் பல்வேறு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வேடநத்தம் வெங்கடேசன், காட்டுவேளானந்தல் ஜெயராமன், கோணலூர் கறீம், சோ. பள்ளம் ஜேம்ஸ், ரெட்டியாபாளையம் இடைநிலை ஆசிரியர் சத்தியமூர்த்தி ஆகியோர் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்.