பொள்ளாச்சியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2023 2:30 AM IST (Updated: 12 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட கோரி பொள்ளாச்சியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும், மாணவர்களை மதிப்பீடு செய்வது போன்ற பணியை முற்றிலும் நீக்க வேண்டும், பி.எட். பயிற்சி மாணவர்களை கொண்டு பள்ளி மாணவர்களை ஆய்வு செய்ய உட்படுத்த கூடாது, எமிஸ் பணியில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும், ஆசிரியர்களை (ஆர்.பி.) கருத்தாளர்களாக நியமிக்க கூடாது, விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்க கூடாது, பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை மட்டுமே நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலகத்தில் நேற்று மாலை தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(டிட்டோ-ஜாக்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் குமரகுருபரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story