ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்


ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்
x

செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் அருகே ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு போரட்டம் நடந்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு போரட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியை நிலுவையின்றி அறிவித்த தேதியில் இருந்தே வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. உடனடியாக நிறுத்திவைக்கப்பட்ட காலத்திற்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் ஜோசப், மாவட்ட பொருளாளர் கருணாநிதி முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் குருசாமி, அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் பொன்னழகி, மாநில செயற்குழு உறுப்பினர் செபாஸ்டியான் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story