ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x

செங்கோட்டையில் ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சார்பில் செங்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இடைநிலை ஆசிரியா்கள் கடைநிலை ஊதியம் பெறுவதை களைதல், தேசிய கல்விக்கொள்கை திரும்பப்பெறுதல் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவா் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் சிவராமன் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினா் சிலுவைராஜ் வரவேற்று பேசினார். வட்டார செயலாளா் ரவிச்சந்திரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் முருகன், செயற்குழு உறுப்பினா் ராஜாராம், சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் கோவில்பிச்சை ஆகியோர் பேசினர். முடிவில் வட்டார பொருளாளா் செண்பகவல்லி நன்றி கூறினார்.


Next Story