சிவகாசியில் ஆசிரியர்கள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்


சிவகாசியில் ஆசிரியர்கள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2023 12:15 AM IST (Updated: 6 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் ஆசிரியர்கள் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம் செய்தனர்

விருதுநகர்

சிவகாசி

சென்னையில் ஊதிய உயர்வு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நேற்று காலை கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து சிவகாசி வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கண்ணன் தலைமை தாங்கினார். வைரமுத்து முன்னிலை வகித்தார். ஞானசேகரன், அந்தோணிசாமி, திருவேங்கடராமானுஜம், கனகராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி வட்டாரத்தில் பணியாற்றும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தனியார் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகிய சங்கங்களை சேர்ந்த 230 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story