பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்


பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூரில் தமிழ்நாடு பட்டதாரி- முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கழகத்தின் மாநில தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொருளாளர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் சுப்பிரமணி சிறப்புரையாற்றினார். அனைத்து அரசு பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதோடு தொடர்ந்து பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும். 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு கற்றல், கற்பித்தல் சிறக்க பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். தி.மு.க. கொடுத்த தேர்தல் அறிக்கையின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மத்திய அரசு போல் தமிழக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவித்துவிட்டு வழங்காதிருப்பதை கண்டிப்பதோடு, உடனடியாக அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது. சரண் விடுப்பு ஒப்படைப்பு செய்ய விதித்துள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். 2004 முதல் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், அவர்களது தொகுப்பூதிய பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக மாற்றி ஆணை பிறப்பிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாவட்ட தலைவர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் அருண்குமார் நன்றி கூறினார்.


Next Story