பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடியில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்


பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடியில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம்
x

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடியில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

திருநெல்வேலி

பேட்டை:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், மாறிவரும் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்களாக 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தரம் உயர்த்திட ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 22 தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலை 4.0 தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்களை காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் நெல்லை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.65 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலை 4.0 தொழில்நுட்ப மேம்பாட்டு மையமும் அடங்கும்.

தொடர்ந்து பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல பயிற்சி இணை இயக்குனர் செல்வகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story