விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள பெரியவட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 21). இவருக்கு திருமணமாகி பரணி என்ற கணவர் உள்ளார். இவர்கள் கரூர் ஆத்தூர் பகுதியில் வீடு வாடகை எடுத்து குடியிருந்து வந்துள்ளனர். இந்நிலையில் பிரியதர்ஷினி கடந்த சில மாதங்களாக தலைசுற்றல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரியதர்ஷினி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story