செக் மோசடி வழக்கில் வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை


செக் மோசடி வழக்கில் வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை
x

செக் மோசடி வழக்கில் வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி

முசிறி:

முசிறியை அடுத்த சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மதிவாணன்(வயது 43). இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது நண்பர் மூலம் பழக்கமான கர்நாடக மாநிலம் குடகையை சேர்ந்த இளஞ்சன் மகன் சதீஷ்(25) என்பவருக்கு, வீடு கட்டுவதற்காக ரூ.8 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்டபோது, அதற்கான காசோலையை மதிவாணனிடம் சதீஷ் கொடுத்ததாக தெரிகிறது. அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, சதீசின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்துள்ளது. இது குறித்து முசிறி கோர்ட்டில் மதிவாணன் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை குற்றவியல் நீதிபதி மோனிகா விசாரித்து, சதீசுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்ததோடு, காசோலையில் நிரப்பப்பட்ட ரூ.8 லட்சத்தை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். மேற்படி தொகையை திருப்பித்தராத பட்சத்தில், மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


Next Story