இளம்பெண் தற்கொலை


இளம்பெண் தற்கொலை
x

திண்டுக்கல் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள பெரிய பொன்மாந்துறை சவரிமுத்து நகரை சேர்ந்தவர் டேவிட் பிரான்சிஸ் (வயது 30). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி விஜி லூர்து மேரி (26). இந்த தம்பதிக்கு டெனில் (5) என்ற மகனும், சசித்ரா (3) என்ற மகளும் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த விஜி லூர்துமேரி, நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜி லூர்துமேரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்துள்ளார். மேலும் விஜி லூர்து மேரிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story