குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை


குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 6 Feb 2023 12:38 AM IST (Updated: 6 Feb 2023 3:59 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்

நாமக்கல் அருகே உள்ள பொம்மசமுத்திரம் ஈச்சவாரியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). லாரி டிரைவர். இவருக்கும், கேரளா மாநிலம், கொல்லத்தை சேர்ந்த திவ்யா (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் பிரபாகரன், திவ்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த திவ்யா, அரளி விதையை அரைத்து குடித்து விட்டார்.

ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன திவ்யாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் சேலம் உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story