தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அழகர் (எ) பெரியசாமி. இவருடைய மனைவி மேனகா (வயது 28). அழகர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு 10 நாட்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்து உள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த மேனகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் வீட்டுக்கு வந்த அவரது உறவினர் தேவி, வேல்முருகன் ஆகியோர் மேனகா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறு காரணமாக மேனகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story