வீட்டில் சாராயம் பதுக்கிய வாலிபர் கைது


வீட்டில் சாராயம் பதுக்கிய வாலிபர் கைது
x

ராமநத்தம் அருகே வீட்டில் சாராயம் பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே உள்ள கொரக்கவாடி அம்மாகுளத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் ஜெகதீசன்(வயது 33). இவர், தனது வீட்டில் சாராயம் பதுக்கி வைத்திருந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் ராமநத்தம் போலீசார் விரைந்து வந்து ஜெகதீசன் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஜெகதீசனை கைது செய்தனர்.


Next Story