ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது
ரேஷன் அரிசி பதுக்கிய வாலிபர் கைது
பொள்ளாச்சி
ஆனைமலை பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் ஆனைமலை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது செம்மேடு செல்லும் ரோட்டில் கந்தசாமி லே அவுட் பகுதியில் மறைவான பகுதியில் மூட்டைகள் கிடந்தன. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஆனைமலையை சேர்ந்த ரசூல் (வயது 24) என்பவர் கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் ஆனைமலை பகுதி பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் 50 கிலோ வீதம் 30 மூட்டைகளில் இருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.