கஞ்சா, சாராயம் விற்ற வாலிபர் கைது


கஞ்சா, சாராயம் விற்ற வாலிபர் கைது
x

கஞ்சா, சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி போலீஸ சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் எல்.என்.புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்.என்.புரம் சுடுகாடு அருகே சந்தேகப்படும்படி நடந்து சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த அப்பு (வயது 19)என்பது தெரிந்தது. மேலும் அவர் கஞ்சா மற்றும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தொியவந்தது. இதையடுத்து அவரை போலீசாா் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சாராயம் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story