புகையிலை பொருட்கள் விற்பனை வாலிபர் கைது


புகையிலை பொருட்கள் விற்பனை வாலிபர் கைது
x

காணை பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை வாலிபர் கைது

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அங்குள்ள பிள்ளையார் கோவில் தெரு மற்றும் தோகைப்பாடி பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காணை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மளிகை கடையில் இருந்து 1,880 பாக்கெட் புகையிலை பொருட்களையும் மற்றும் தோகைப்பாடியில் உள்ள பெட்டிக்கடையில் இருந்து 75 பாக்கெட் புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதனை பதுக்கி வைத்ததாக விழுப்புரம் அருகே தென்னமாதேவி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை(வயது 32), தோகைப்பாடியை சேர்ந்த நாராயணசாமி(57) ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.20 ஆயிரமாகும்.


Next Story