பயிற்சி டாக்டரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது


பயிற்சி டாக்டரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது
x

பயிற்சி டாக்டரிடம் செல்போன் பறித்து விட்டு ஓடியவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர்.

திருவண்ணாமலை

பயிற்சி டாக்டரிடம் செல்போன் பறித்து விட்டு ஓடியவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் கீழ்காங்கேயனூர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 23). இவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் இருந்த செல்போனை வாலிபர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். உடனே அவர் அங்கிருந்து பொதுமக்கள் உதவியுடன் அந்த நபரை விரட்டி பிடித்து திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் பிடிபட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து செல்போனை மீட்டு பயிற்சி டாக்டர் கலைசெல்வனிடம் ஒப்படைத்தனர்.


Next Story