மினி லாரி உரிமையாளரிடம் செல்போனை திருட முயன்ற வாலிபர் கைது


மினி லாரி உரிமையாளரிடம் செல்போனை திருட முயன்ற வாலிபர் கைது
x

மினி லாரி உரிமையாளரிடம் செல்போனை திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூரை சேர்ந்தவர் சாரதி (வயது 26). இவர் சென்னை கோயம்பேட்டில் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு தனது மினி லாரியில் விழுப்புரம் வந்தார். பின்னர் விழுப்புரம் மார்க்கெட்டில் காய்கறி லோடுகளை இறக்கிவிட்டு மீதமுள்ள காய்கறிகளை புதுச்சேரிக்கு சென்று இறக்குவதற்காக புறப்பட்டார். விழுப்புரம் ராகவன்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது சாலையோரமாக மினி லாரியை நிறுத்திவிட்டு அதிலேயே படுத்து தூங்கியுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர், அந்த மினி லாரியின் கதவை திறந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த சாரதியின் செல்போனை திருட முயற்சி செய்தார். உடனே எழுந்த சாரதி, அந்த வாலிபரை கையும், களவுமாக மடக்கிப்பிடித்து வளவனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த வாலிபர் சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ஸ்ரீகுமார் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story