பொத்தேரியில் செல்போன் திருட்டு வழக்கில் வாலிபர் கைது


பொத்தேரியில் செல்போன் திருட்டு வழக்கில் வாலிபர் கைது
x

பொத்தேரியில் செல்போன் திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 23), இவர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தங்கியிருந்த அறையை பூட்டி விட்டு தனது நண்பருடன் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வாலிபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று செல் போனை திருடினார். அப்போது சத்தம் கேட்டு மாடியில் இருந்து கீழே வந்த அசோக் குமார் செல்போனை திருடிய வாலிபரை மடக்கி பிடித்து மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரித்த போது அவர் சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 22) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் சஞ்சய் மீது செல்போன் திருடியதாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story